உங்கள் குறிக்கோளில் எப்படி வெற்றியடைவது?

உங்களுடைய வெற்றிக்கு நீங்கள் எந்த துறையில் 
ஈடு பட்டு இருந்தாலும் அந்த துறையில் முழு விருப்பத்துடன் பணியாற்றுங்கள். 

உங்கள் மனதை முழுவதுமாக 
அதில் செலுத்தவேண்டும். உங்கள் மனதை அது போன்று 
பழக்க படுத்தினீர்கள் என்றால் நீங்கள் அடைய போகும் 
வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. 

உங்கள் விருப்பம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு நிறைய விருப்பங்கள் 
ஆர்வங்கள் இருக்கலாம் அவற்றில் நீங்கள் எதை 
முதன்மையாக கருதுகிறீர்களோ அந்த விருப்பத்தை 
முதலில் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். 

நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பம் சரியான விருப்பம் என்றால் 
அதை அடைந்து விடுவீர்கள் என்று கடுமையான 
நம்பிக்கையை வையுங்கள். உங்களுடைய முழு ஆற்றலையும் உபயோகபடுத்தி 
உங்களுடைய விருப்பத்தை அடைந்து விடுவீர்கள் 
என்று நம்பிக்கையுடன் செயல்படுங்கள். நிச்சயம் 
வெற்றி கிடைக்கும். 

வாழ்க்கையில் எந்த துறையிலும் நீங்கள் வெற்றி 
அடைய வேண்டும் என்றாலும் ஒரு இலக்கு வேண்டும். 

போகும் ஊர் என்ன என்று தெரிந்தால் தான் 
அந்த ஊருக்கு செல்ல முடியும். போகும் தூரத்தையும் 
பாதையும் இடத்தையும் 
பற்றி தெளிவாக தெரியவில்லை என்றால் எப்படி 
உங்களால் போய் சேர  வேண்டிய இடத்திற்கு போக முடியும். 

வாழ்க்கையில் உங்கள் இலக்கு என்ன என்று தெரிந்தால்தான் 
நீங்கள் அடைய வேண்டிய வெற்றியை சுலபமாக 
அடைந்து விடலாம். 

நீங்கள் நம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் 
உங்கள் இலக்கை அடைய 
முயற்சி செய்ய முற்படும் போது  இயற்கை சக்திகள் 
அனைத்தும் உங்களுக்கு உங்களுடைய வெற்றியை 
அடைய உதவி செய்யும்.

நல்லதே நடக்கும் என்று தீவிரமாக எண்ணுங்கள். 
நல்லதே நடக்கும் என்று எதிர்பாருங்கள். உங்கள் இலக்கு 
வெற்றியடைய நல்ல எண்ணங்களையே உங்கள் 
மனதிற்கு எடுத்து செல்லுங்கள். 

உங்கள் இலக்கில் 
வெற்றியடைய வெற்றியடைந்து விடுவோம் 
என்னும் நம்பிக்கை விதையை மனதில் 
விதையுங்கள். 

உங்கள் மனதில் விதிக்கப்பட்ட நம்பிக்கை விதை வெற்றி 
எனும் ஆலமரமாகி தழைத்து நிற்கும்.        
வாழ்க்கையில் உங்கள் இலக்கை அடைய அது 
கல்வியாகட்டும், வேலை வாய்ப்பாகட்டும், தொழிலாகட்டும் 
அல்லது வேறு எதுவாக இருந்தாலும் 
உங்களுடைய மனது உங்களுக்கு சாதகமாக 
உழைக்க வேண்டும். 

மனது என்பது அடிக்கடி நிறம் மாறக்கூடியது. நீங்கள் 
நினைக்கும் நினைப்பிற்கு தகுந்தாற்போல் உங்கள் 
மனதும் மாறி விடும். 

உங்கள் இலக்கை அடைய குழப்பமில்லாத  மனம் 
அவசியம் தேவை. 

தியானம் என்னும் அறிய கலையின் மூலமாக 
உங்களுடைய மனதை உங்கள் இலக்கை அடைய 
உங்களுக்கு சாதகமாக உழைக்க செய்யலாம். 

தியானத்தின் மூலமாக உங்கள் மனதை நிலையாக 
நிறுத்த செய்து உங்கள் இலக்கை அடைய செய்யலாம். 

தியானம் என்னும் கருவி உங்கள் இலக்கை அடையும் போது 
உண்டாகும் மன குழப்பங்களை அகற்றி உங்களை வெற்றி 
எனும் பாதையில் பயணிக்க செய்யும். 
  
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள